பாம்புக்காக பூர்வீக வீட்டைக் கொடுத்த குடும்பம் - கோயிலாக கும்பிடும் மக்கள்..!

பாம்புக்காக பூர்வீக வீட்டைக் கொடுத்த குடும்பம் - கோயிலாக கும்பிடும் மக்கள்..!
பாம்புக்காக பூர்வீக வீட்டைக் கொடுத்த குடும்பம் - கோயிலாக கும்பிடும் மக்கள்..!

தஞ்சையில் நல்ல பாம்பு ஒன்றிற்காக ஒரு குடும்பம் தங்கள் பூர்விக வீட்டை விட்டுக் கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பசுபதி கோவில் மணல்மேட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் வசந்தி மற்றும் அவரது சகோதரர் வெங்கட்ராஜன். இவர்களுக்கு அதே பகுதியில் தங்கள் தாத்தாவின் பூர்வீக சொத்தான வீடு உள்ளது. இந்த வீட்டின் உள்பகுதியில் பெரிய அளவிலான பாம்புப்புற்று என சொல்லப்படும் ‘கறையான் புற்று’ இருக்கிறது. இந்த புற்றுக்கு நல்லபாம்பு ஒன்று வந்து செல்கிறது. இதனையறிந்த வெங்கட்ராஜன் குடும்பத்தினர், அந்த வீட்டில் வசிக்காமல் பாம்புக்காக வீட்டையை கோவிலாக்கி வழிபட ஆரம்பித்துள்ளனர்.

வெங்கட்ராஜன் என்பவரது தாத்தா கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு பட்டு நெசவு செய்து வந்தார். அப்போது தனது தாத்தாவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்கள், அந்த வீட்டில் பாம்பு ஒன்றை அடித்து கொன்றுள்ளனர். அந்த இடத்தில் கறையான் புற்று சிறிதாக ஏற்பட்டது. அந்த கறையான புற்றை கலைத்தவுடன் மீண்டும், மீண்டும் பெரிதாக கறையான் புற்று ஏற்பட்டது. இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் அந்த இடத்தில் பாம்பு புற்று ஏற்பட்டு பாம்பு வசிப்பதாக குறி சொல்லியுள்ளனர். இதனையறிந்ததும் கடந்த 21 ஆண்டுகளாக அதை கலைக்காமல் பாம்பு வசிக்கட்டும் என்று முட்டை, பால் வைத்து மஞ்சள் நீர் தெளித்து சாமியாக வணங்கி வருகின்றனர். இவ்வாறு அப்பகுதியினர் கூறுகின்றனர்.

தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி அக்கம்பக்கத்தினரும் விஷேச நாட்களில் இங்கு வந்து சாமி கும்பிடுகின்றனர். நல்லபாம்பு அவ்வப்போது இங்கு வந்து செல்வதை அனைவரும் பார்த்துள்ளனர். நல்ல பாம்பினால் யாருக்கும் தொந்தரவு இல்லை என்றும் அங்கு வரும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீட்டை அப்பகுதியில் பாம்பு புற்று வீடு என்றுதான் எல்லோரும் அழைப்பார்களாம். பாம்புக்கு வீடு கொடுத்து மற்றொரு வீட்டில் வசிக்கும் வெங்கட்ராஜன், வசந்தி குடும்பத்தினரை அப்பகுதியினர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com