\
மனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி

மனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி

மனநலம் பாதித்த மகள் : குணப்படுத்த முடியாமல் குடும்பமே தற்கொலை முயற்சி
Published on

கும்பகோணம் அருகே மனநலம் பாதித்த பெண்ணை குணப்படுத்த முடியாததால் குடும்பமே தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு புவனேஸ்வரி, திவ்யா, பவானி என்ற மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். அவர்களில் புனவனேஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு பல இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனநல பாதிப்பை குணப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரும் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றனர். 

இதையடுத்து மயங்கி கிடந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com