மந்தைவெளி: கனமழையால் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

மந்தைவெளி: கனமழையால் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

மந்தைவெளி: கனமழையால் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்
Published on

சென்னை மந்தைவெளி சிக்னல் அருகில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக சாலை பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியிருப்பதோடு சாலைகளும் பழுதடைந்து வருகின்றன. பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று மந்தைவெளி சிக்னல் அருகில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மந்தவெளி ஆர்.கே மடம் சாலையிலிருந்து மயிலாப்பூர் செல்லக்கூடிய சாலை மற்றும் மந்தைவெளியிலிருந்து பட்டினபாக்கம் செல்லக்கூடிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் அதை மூடுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com