வங்கக்கடல், அரபிக்கடல்.. இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
அரபிக் கடலில் விரைவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும். இதனால் எவ்வித தாக்கமும் இந்தியாவில் இருக்காது.
வங்கக் கடலில் வரும் 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்தம், வடமேற்கு திசையில் நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாற உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ஆனால் புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தகவல் இப்போது இல்லை.
புயலாக வலுப்பெறும் பட்சத்தில் வடக்கு நோக்கி செல்லும் எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கும் பட்சத்தில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். ஆனால் வடக்கு நோக்கி செல்லவே வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.