காற்றழுத்த தாழ்வு பகுதிபுதியதலைமுறை
தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி! திசை எப்படி இருக்கும்?
கடந்த சில தினங்களுக்கு முன் ஃபெஞ்சல் புயலானது தமிழகத்தில் கரையைக்கடந்து, அனேக இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி சென்ற நிலையில், தற்பொழுது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தோன்றியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஃபெஞ்சல் புயலானது தமிழகத்தில் கரையைக்கடந்து, அநேக இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி சென்ற நிலையில், தற்பொழுது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தோன்றியுள்ளது.
தற்பொழுது வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. மேற்கு வடமேற்கு பகுதி வழியாக, தமிழகம் மற்றும் இலங்கையை நோக்கி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நகரும் என்று வானிலை மையம் கணித்து இருக்கிறது.
ஆகையால், நாளை முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை எதிர்பார்க்கலாம். ஒரு சில இடங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா இல்லையா என்பது குறித்து வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.