\
வயதான மாமியாரை கைகளில் தூக்கி வந்து வாக்களிக்க வைத்த மருமகள்

வயதான மாமியாரை கைகளில் தூக்கி வந்து வாக்களிக்க வைத்த மருமகள்

வயதான மாமியாரை கைகளில் தூக்கி வந்து வாக்களிக்க வைத்த மருமகள்
Published on

87 வயதான தனது மாமியாரை, மருமகள் கையில் சுமந்து கொண்டு வந்து வாக்களிக்க வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்குப்பம் ஊராட்சி ஏரிகரை தெருவைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(87). இவரது மருமகள் பாண்டியம்மா. மிகவும் வயதான பாப்பம்மாள், உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கை செலுத்த வேண்டுமென அவரது மருமகளிடம் கூறியுள்ளார். ஆனால் பார்வை சரியாக தெரியவில்லை என்றும் நடந்து செல்ல முடியாத நிலையில் எப்படி வாக்களிக்க முடியும் என பாண்டியம்மா கேட்டுள்ளார். ஆனால் தான் வாக்களித்தே தீரவேண்டும் என பாப்பம்மாள் கூறியதால் சற்றும் யோசிக்காமல் பாப்பம்மாளை ஆட்டோவில் அழைத்து வந்தார்.

வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்து செல்ல வீல் சேர் இல்லாததால் சற்றும் யோசிக்காத பாண்டியம்மா மாமியாரை கையில் தூக்கிச்சென்று வாக்களிக்க செய்தார். இந்தச் சம்பவத்தை பார்த்த வாக்காளர்கள் மற்றும் போலீசார் நெகிழ்ச்சி அடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com