இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்
Published on

கோவையில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி, கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்தார்.

கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், சோமனூர் சங்கத் தலைவர் பழனிச்சாமி (74). விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட இவர் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் சோமனூர் விசைத்தறியாளர்கள் சங்க கட்டட வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உயிரிழப்பிற்கு விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி சங்கங்கள், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பழனிச்சாமி உயிரிழந்த துக்கத்தில் இருந்து அவரது மனைவி கருப்பாத்தாள் இன்று காலை உயிரிழந்தார். இவர்களது உயிரிழப்பு விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறி சங்கங்களுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com