கிருஷ்ணகிரியில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் ஆட்டுச்சந்தையில், ஒரு ஜோடி ஆடுகள் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின.
வருகிற புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநில எல்லைகளில் அமைந்திருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு,தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி கிருஷ்ணகிரியில் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதில், ஒரு ஜோடி ஆடுகள், 10 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாகின.