கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி 3 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி 3 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி 3 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி
Published on

காஞ்சிபுரம் அருகே கட்டுமான பணியின் போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை பகுதியில் அமைந்துள்ளது புதுநகர் அவின்யூ பகுதியில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர், புதிய 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சுமித் (47) என்பவர் மூன்றாவது மாடி அருகே எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, மாடியிலிருந்து தவறி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 அவசர உதவிக்கு தெரிவித்த நிலையில், அங்கு வந்து அவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே சுமித் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலுசெட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com