\
செல்போன் பட்டனை விழுங்கிய குழந்தை

செல்போன் பட்டனை விழுங்கிய குழந்தை

செல்போன் பட்டனை விழுங்கிய குழந்தை
Published on

சென்னையில் செல்போன் பட்டனை விழுங்கிய குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது 3 வயது ஆண் குழந்தை உத்தேஷ், நேற்று செல்போனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவன் எதிர்பாராதவிதமாக செல்போனின் பட்டனை விழுங்கிவிட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையடுத்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். தற்போது சிறுவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com