சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அமமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்போகி பாண்டி. சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடியில் அமமுக தேர்தல் அலுவலகம் அனுமதியின்றி திறந்ததாக கூறி காரைக்குடி போலீசார் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்போகி பாண்டி மீது கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே போல இராமநாதபுரம் அமமுக வேட்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.