\
திருமண பதிவுக்கு மருத்துவச்சான்று அவசியமாகுமா?

திருமண பதிவுக்கு மருத்துவச்சான்று அவசியமாகுமா?

திருமண பதிவுக்கு மருத்துவச்சான்று அவசியமாகுமா?
Published on

திருமண பதிவுக்கு மருத்துவ சான்று அவசியம் என்ற மனுவுக்கு மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமண பதிவு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “தமிழகத்தில் 2009ஆம் ஆண்டு திருமண பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும், திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படவில்லை. எனவே திருமணப் பதிவையும், மணமக்களின் மருத்துவத் தகுதிச் சான்றையும் கட்டாயமாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்து நீதிபதிகள், ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com