சாலையில் சென்றபோது பழுதடைந்த கார்: சரிசெய்த போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சாலையில் சென்றபோது பழுதடைந்த கார்: சரிசெய்த போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சாலையில் சென்றபோது பழுதடைந்த கார்: சரிசெய்த போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

பல்லடம் பொள்ளாச்சி சாலையில் சென்று கொண்டிருந்த கார், இயந்திர கோளாறு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் தங்கமணி. சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வரும் இவர், தனது சொந்த வேலை காரணமாக பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி சாலையில் வதம்பச்சேரி நோக்கி காரில் சென்றுள்ளார்.

அப்போது வெங்கிட்டாபுரம் பகுதியை கடக்கும் போது இயந்திர கோளாறு ஏற்பட்டு கார் பழுதடைந்துள்ளது. இந்நிலையில் தங்கமணி காரில் இருந்து இறங்கி இயந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து மள மளவென எரியத் தொடங்கியது.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்க வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com