'அனுதாபம் தேடவே மேடைகளில் துரைமுருகன் அழுகிறார்'' - ஏ.சி.சண்முகம் 

'அனுதாபம் தேடவே மேடைகளில் துரைமுருகன் அழுகிறார்'' - ஏ.சி.சண்முகம் 

'அனுதாபம் தேடவே மேடைகளில் துரைமுருகன் அழுகிறார்'' - ஏ.சி.சண்முகம் 
Published on

மக்களிடம் அனுதாபத்தை தேடிக்கொள்வதற்கு துரைமுருகன் மேடைகளில் அழுகிறார் என அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். 

மக்களவைத் தேர்தலின் போது வேலூரை தவிர இந்தியா முழுவதும் தேர்தல் நடந்து முடிந்தது. வேலூரில் மட்டும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக இருந்து ரூ.10 கோடிக்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆம்பூர் சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் துரைமுருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “என் வீட்டுத் தோட்டத்தில் பணத்தை பதுக்கி வைத்தவர்கள் யாரென எனக்கு தெரியும். பொறுத்திருந்து பாருங்கள். என் வீட்டில் சோதனை செய்வதற்காக ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்தது யார் ? என் மகனை லாரி ஏற்றி கொல்லச் சொன்னது யார் ”? என கூட்டத்தில் கண்ணீர் மல்க பேசினார்.

இந்நிலையில், மக்களிடம் அனுதாபத்தை தேடிக்கொள்வதற்கு துரைமுருகன் மேடைகளில் அழுகிறார் என அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த தேர்தலில் என்னை முதுகில் குத்திவிட்டதாக துரைமுருகன் கூறுவது நாடகம் எனவும் சிறுபான்மையினரின் பாதுகாவலன் என திமுக கூறுவது வேடம்தான் எனவும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com