எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த கிராமத்தில் புத்தாண்டு கொண்டாடி மகிழும் தொழிலதிபர்

எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த கிராமத்தில் புத்தாண்டு கொண்டாடி மகிழும் தொழிலதிபர்
எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த கிராமத்தில் புத்தாண்டு கொண்டாடி மகிழும் தொழிலதிபர்

பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் தொழில்செய்து வரும் பெரம்பலூரைச் சேர்ந்த தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் என்பவர் வருடந்தோறும் சொந்த கிராமத்தில் புத்தாண்டை கொண்டாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரைச் சேர்ந்தவர் டத்தோ பிரகதீஸ்குமார். இவர், மலேசியா சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய், ஹாங்காங், தென்ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ளஸ்மேக்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், தொழில் நிமித்தமாக அவர் வருடம் முழுவதும் வெளிநாட்டில் இருந்தாலும் புத்தாண்டு மற்றம் பொங்கல் பண்டிகையை அவரது சொந்த ஊரான பூலாம்பாடி கிராமத்தில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த புத்தாண்டு பிறப்பை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்துடன் டத்தோ பிரகதீஸ்குமார் பூலாம்பாடிக்கு வந்துள்ளார். இசைக்கச்சேரி, விருந்து உபசரிப்பு என நிகழ்ச்சி களைகட்ட உறவவினர்கள் நண்பர்கள் மற்றும் கிராமத்தினருடன் டத்தோ பிரகதீஸ்குமார் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார்.

மேலை நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றாலும் தனக்கு சொந்த ஊரில் பண்டிகைகளை கொண்டாடுவதே உற்சாகத்தை தருகிறது எனக் கூறும் டத்தோ பிரகதீஸ்குமார்... இந்த புத்தாண்டில் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகளை தெரிவித்தார். எந்தநாட்டில் இருந்தாலும் சொந்த ஊருக்கு வந்து எங்களை எல்லாம் ஒருங்கிணைத்து புத்தாண்டை கொண்டாடும் டத்தோ பிரகதீஸ்குமாரின் குணம் தங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தருவதாக நண்பர்களும் உறவினர்களும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்நு கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிறைவாக வானில் வர்ணஜாலம் காட்டும் கண்கவர் வான வேடிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவுபெற்றது. எங்கிருந்தாலும் சொந்த ஊரில் பண்டிகையை சிறப்பிப்பது என்பது அலாதிதான். அதிலும் வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து மக்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழும் டத்தோ பிரகதீஸ்குமார் குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்ளே.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com