\
காஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக கூறி மோசடி : ரூ. 1 கோடி கொடுத்து ஏமாந்த இளைஞர்

காஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக கூறி மோசடி : ரூ. 1 கோடி கொடுத்து ஏமாந்த இளைஞர்

காஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக கூறி மோசடி : ரூ. 1 கோடி கொடுத்து ஏமாந்த இளைஞர்
Published on: 

நடிகை காஜல் அகர்வாலை சந்திப்பதற்காக தொழிலதிபரின் மகன் ஒருவர், ஒரு கோடி ரூபாய் வரை பறிகொடுத்தது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலபதிபரின் மகன் ஒருவர், நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பியுள்ளார். சமூக வலைதளம் மூலம் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட அவர், பதிவுத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். காஜல் அகர்வாலை சந்திக்க வைப்பதாக உறுதியளித்த சமூக வலைதள கும்பல், அவரிடம் 1 கோடி ரூபாய் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. 

ஒருகட்டத்தில், ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞர், மன உளைச்சலால் கொல்கத்தாவுக்குச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரில் கொல்கத்தா விரைந்த ராமநாதபுரம் காவல்துறையினர், இளைஞரை மீட்டு தமிழகம் அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சரவணக்குமார் என்ற திரைப்பட தயாரிப்பாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இளைஞரிடம் இருந்து பறித்த பணத்தில், 68 லட்சம் ரூபாயை கிரிக்கெட் சூதாட்டத்தில் தோற்றுவிட்டதாக சரவணன் கூறியுள்ளார். அவரிடம் எஞ்சியிருந்த 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com