இடிதாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரம் - இருளில் மூழ்கிய ஆரணி நகரம்

இடிதாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரம் - இருளில் மூழ்கிய ஆரணி நகரம்
இடிதாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரம் - இருளில் மூழ்கிய ஆரணி நகரம்

ஆரணி அருகே தென்னை மரத்தின் மீது இடி தாக்கியதால் ஆரணி நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தொடர்ந்து 3 மணி நேரம் இருளில் மூழ்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் தென்னை மரத்தின் மீது நேற்றிரவு இடி தாக்கியதால் தென்னை மரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் தென்னை மரத்தின் அருகில் செல்லும் மின் கம்பிகள் பாதிப்படையுமா? என்ற அச்சத்தில் மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவலை தெரிவித்தனர்.

இதன் காரணமாக ஆரணி டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள. கிராமங்களில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து மூன்று மணி நேரமாக ஆரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் முழ்கின.

பச்சை ஈரமுள்ள இரண்டு தென்னை மரத்தில் இடி தாக்கியதால் கொழுந்து விட்டு எரிந்த கணோளி காட்சி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com