வயநாடு பேரிடர் நிதிpt desk
தமிழ்நாடு
வயசு சிறுசு ஆனா மனசு ரொம்ப பெருசு.. சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்!
ஊத்தங்கரையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம, நான்கு வயது சிறுவன்; வயநாடு பேரிடர் நிதியாக 10 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.
செய்தியாளர்: மு.அரிபுத்திரன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர்களுக்கு கட்டபட்டு வரும் வீடுகளை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆட்சியர் சராயு மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Minister Masthanpt desk
எந்தளவுக்கு போக்கை மாற்றியது சாலியாறு..ஆற்றை ஒட்டிய கிராமங்களுக்கு எவ்வளவு பாதிப்பு? வரைகலை விளக்கம்
இந்நிலையில், கொட்டுகாரண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தூரபாண்டி என்பவரது நான்கு வயது மகன் பிடல் காஸ்ட்ரோ, தான் சேர்ந்து வைத்திருந்த உண்டியல் பணம் 10 ஆயிரம் ரூபாயை வயநாடு பேரிடர் நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினார். பணத்தை வழங்கிய சிறுவனை அமைச்சரும், ஆட்சியரும் பாராட்டினர்.