திடீரென Action காட்டிய சிறுவன்.. ஆடிப்போன விஜய்! #Video

விஜய்யை சந்திக்க வந்த மாணவன் திடீரென கராத்தே செய்வதை போல் ஆக்ஷன் செய்ததால், விஜயே ஒருநொடி ஆடிப்போய்விட்டார்.

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விஜய்
விஜய்PT web

இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மேடைக்கு அழைத்து சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கினார் விஜய்.

அப்போது மேடைக்கு விஜயை சந்திக்க வந்த ஒரு மாணவன் திடீரென கராத்தே செய்வதை போல் ஆக்ஷன் செய்ய ஆரம்பித்து விட்டார். கராத்தேவின் முடிவில் மாஸ்டருக்கு மரியாதை செய்வதை போல் விஜயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுகொண்டார்.

விஜய் முன் கராத்தே செய்த சிறுவன்
விஜய் முன் கராத்தே செய்த சிறுவன்

சிறுவனின் இந்த செயலை எதிர்ப்பார்க்காத நடிகர் விஜய் ஒரு கணம் ஆச்சரியமடைந்தார். பிறகு அந்த மாணவனுக்கு சால்வை அணிவித்து பாராட்டிய அவர், பரிசு சான்றிதழ் வழங்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com