“15 உலக சாதனை செய்துள்ளேன்; சாகசம் பண்ணும்போது இதெல்லாம் சகஜம்” - கையில் தீப்பற்றிய சிறுவன் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நலதிட்டம் வழங்கும் விழாவில் ஓட்டை உடைத்து சாகசம் செய்ய முயன்ற சிறுவனின் கையில் தீப்பிடித்து காயம் ஏற்பட்ட நிலையில் சிறுவன் கம்பேக் கொடுப்பேன் என பேட்டியளித்துள்ளார்.
விஜய் பிறந்தநாள் விழாவில் சிறுவனுக்கு தீவிபத்து
விஜய் பிறந்தநாள் விழாவில் சிறுவனுக்கு தீவிபத்துpt

என்ன நடந்தது?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நலத்திட்டம் வழங்கும் மற்றும் ரத்ததான முகாம் நிகழ்ச்சி சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ.சி.ஆர்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மயிலாப்பூரை சேர்ந்த கஜபதி-பிரியா தம்பதியின் மகன் கிரிஷ்வா(11), 7ம் வகுப்பு படித்து வரும் இவர் கராத்தே மாஸ்டர் ராஜன் மூலமாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தலைவர் விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு சாகசம் செய்து காட்டினார்.

சிலம்பம், ஸ்கேட்டிங், வாள் சுற்றுதல், தீப்பற்ற வைக்காமல் 5 ஓடுகளை வைத்து உடைத்தார். பின்னர் 3 ஓடுகளை வைத்து பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்து கையால் அடித்து உடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிறுவன் கையில் தீப்பிடித்து எரிந்தது.

உடன் இருந்த கராத்தே மாஸ்டர் ராஜன், மற்றும் விஜய் கட்சியினர் தீயை அணைக்க முற்பட்டனர் அப்போது மாஸ்டர் கையில் இருந்த பெட்ரோல் ஊற்ற தீ மேலும் எரிந்தது. பின்னர் ஒருவழியாக தீயை அணைத்தனர். இதில் சிறுவன் மற்றும் மாஸ்டர் ராஜனுக்கு தீக்காயம் ஏற்பட்டது, இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

விஜய் பிறந்தநாள் விழாவில் சிறுவனுக்கு தீவிபத்து
’2K + 90ஸ் கிட்ஸ்’ எல்லாரும் காலி.. ‘மாலை டும்டும்’ பாடலுக்கு பின் கலக்கும் ‘கல்யாண கச்சேரி’ பாடல்!

இது சகஜம் தான்.. மீண்டும் கம்பேக் கொடுப்பேன்..

பின்னர் தீக்காயமடைந்த சிறுவனின் தாயார் பிரியா பேசுகையில், என் மகனுக்கு சிறிய காயம் தான் ஏற்பட்டது, தற்போது நன்றாக இருக்கிறார். இது போன்ற பல சாகசங்கள் ஏற்கனவே செய்துள்ளார், இன்று ஏற்பட்ட விபத்து எதிர்பாராத விதமாக நடந்தது. எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். எனக்காக தான் என் மகன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவருக்கும் விஜயை பிடிக்கும், தயாராக பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருந்தோம். மீண்டும் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். நாங்கள் விருப்பப்பட்டு வந்தோம், விபத்து தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

சாகசம் செய்த சிறுவன் பேசுகையில், “15 உலக சாதனை செய்துள்ளேன், இந்த முறை ஸ்பார்க் ஆகியதால் தீப்பற்றியது, இது சகஜம் தான், வலி குறைவாகவே உள்ளது, ஓடு மற்றும் கைகளில் பெட்ரோல் ஊற்றுவது வழக்கமான ஒன்று தான். நிச்சயம் கம்பேக் கொடுப்பேன்” என்று கூறினார்.

விஜய் பிறந்தநாள் விழாவில் சிறுவனுக்கு தீவிபத்து
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com