சென்னை | ரூ.20,000 சைக்கிள் வெறும் ரூ.3000 தான்! ஆஃபரில் கொடுத்த திருடன்.. வசமாக சிக்கியது எப்படி?
சென்னை அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில நாட்களாகவே சைக்கிள் தொடர்ந்து திருடி போயியுள்ளது.
சைக்கிள் எப்படி திருடு போனது, என்று தேடுவதற்காக அமைந்தகரை போலீசார் பல மாதங்களாக தனிப்படை அமைத்து தேடிவந்துள்ளனர்.. இந்நிலையில் நேற்று, அயனாவரம் சந்தை பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக சைக்கிளில் சுற்றிய நபரை, அயனாவரம் தனிப்படை போலீசார் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், சைக்கிளை திருடிய பலே திருடன் வில்லிவாக்கம், மாடவீதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பது தெரியவந்துள்ளது.
இவரிடம் விசாரணை நடத்தியதில், அடுக்கு மாடி குடியிருப்புகளின் பார்க்கிங்கிள் மட்டுமே விலையுயர்ந்த சைக்கிளை குறிவைத்து திருடுவதும், ரூ. 20, 000 மதிப்புள்ள சைக்கிள்களை திருடி, வடமாநிலத்தொழிலாளர்களுக்கு வெறும் ரூ.3000 க்கு விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்..
மேலும், பைக்கை திருடினால் சிசிடிவி மூலம் போலீஸ் பிடித்துவிடுவதாகவும், இதனால், சைக்கிளை திருடுவதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் வெங்கட்ராமன் திருடிய, விலை உயர்ந்த 25 சைக்கிள்களை, அயனாவரம் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின், நேற்று மாலை அவரை சிறையில் அடைத்துள்ளனர்.