அடேங்கப்பா....! பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலா மூங்கில் ஸ்ட்ரா?

அடேங்கப்பா....! பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலா மூங்கில் ஸ்ட்ரா?
அடேங்கப்பா....! பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலா மூங்கில் ஸ்ட்ரா?

சவாலான பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு மாற்றாக மூங்கில் ஸ்ட்ராவை அறிமுகப்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கோவை மாநகராட்சி. 

கோவை மாநகராட்சி பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் ஒருமுறை உபயோகப்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை முறையிலான பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் ஸ்ட்ராவுக்கு பதிலாக மாற்று பொருளை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. பேப்பர் மற்றும் மூங்கில் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்கும் ஸ்ட்ரா வகைகள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பேப்பர் ஸ்ட்ரா ஒன்று ரூ.1.60 பைசா என்ற விலையிலும், மூங்கில் ஸ்ட்ரா ஒன்று ரூ.25 விலையிலும், மொத்த விற்பனையில் சலுகை விலையிலும் மாநகராட்சி வழங்கி வருகிறது. நகர்ப்புறங்களில் ஏற்படும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னைக்குத் தீர்வுக்காணும் வகையில் மாசு ஏற்படுத்தாத பேக், கப், பிளேட், ஸ்பூன், ஸ்ட்ரா என அடுத்தடுத்து கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தி வருகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com