5 வயது சிறுவன் மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பு

5 வயது சிறுவன் மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பு

5 வயது சிறுவன் மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பு
Published on

நாகையை சேர்ந்த 5 வயது சிறுவன் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளான்.

நாகை ஆரிய நாட்டுத்தெருவைச் சேர்ந்தவர் மீனவர் விஜயகுமார். இவரின் 5 வயது மகன் காய்ச்சல் காரணமாக கடந்த 9 நாட்களாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் மூளைக்காய்ச்சலின் தீவிரத்தால் சிறுவன் நேற்று நள்ளிரவு உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் உடல் அவனது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. 

மேலும் ஆரிய நாட்டுத்தெருவில் சாக்கடை மற்றும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்தாதே இது போன்ற காய்ச்சல் பாதிப்புகளுக்கு காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com