\
கிணற்றில் தவறி விழுந்து 4வயது குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து 4வயது குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து 4வயது குழந்தை உயிரிழப்பு
Published on

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து 4வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழாயிரம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குழந்தையுடன் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. கிணற்றின் உள்ளே பார்த்த போது, குழந்தை விளையாடிக் கொண்டிருந்த பொம்மை கிடந்துள்ளது. இதனால் அச்சமடைந்த கல்பனா, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பின், குழந்தையின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. குழந்தையின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com