குன்றத்தூரில் கொரோனா பாதிப்பால் 36 வயது இளைஞர் உயிரிழப்பு 

 குன்றத்தூரில் கொரோனா பாதிப்பால் 36 வயது இளைஞர் உயிரிழப்பு 

 குன்றத்தூரில் கொரோனா பாதிப்பால் 36 வயது இளைஞர் உயிரிழப்பு 
Published on
சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் கொரோனா பாதிப்பு காரணமாக 36 வயது இளைஞர் உயிரிழந்தார்.
 
தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 885ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே குன்றத்தூரில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர், சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது.
 
 
இந்நிலையில் இந்த இளைஞர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடலைப் பரிசோதித்ததில், கொரோனா இருப்பது உறுதியானது. அவர் வசித்த பகுதி முடக்கப்பட்டு, இளைஞரின் குடும்பத்தாருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இளைஞர் வசித்த பகுதியில் உள்ள காய்கறி விற்பனையாளர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான சுவாச நோய்த்தொற்று, ஹைப்போ தைராய்டிசம் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com