\
பெண்ணின் வயிற்றில் இருந்து 33.5 கிலோ கட்டி அகற்றம் !

பெண்ணின் வயிற்றில் இருந்து 33.5 கிலோ கட்டி அகற்றம் !

பெண்ணின் வயிற்றில் இருந்து 33.5 கிலோ கட்டி அகற்றம் !
Published on

கோவையில் பெண் ஒருவரின் வயிற்றில் 33.5 கிலோ எடை கொண்ட கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 

உதகையைச் சேர்ந்த விவசாயி வசந்தா. வசந்தாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தை விட வயிறு பெரிதாக காணப்பட்டது. வயது மூப்பினால் வரும் தொப்பை என்று கருதி இதனை வசந்தா கண்டுகொள்ளவில்லை. ஆனால் சிறிது நாட்களில் சந்தேகம் அடைந்த வசந்தா வயிற்று வீக்கம் தொடர்பாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதை உறுதிபடுத்தினர். 

இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வசந்தாவின் வயிற்றில் 33.5 கிலோ எடையுள்ள கட்டி இருந்ததைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் கட்டி அகற்றப்பட்டது. 

பெண்ணின் வயிற்றில் 33.5 கிலோ எடை கொண்ட கட்டி இருப்பது அரிதான விஷயம் என்பதால் கின்னஸ் நிறுவனத்துக்கு உலக சாதனைக்காக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com