\
பிறந்த 3 நாட்களே ஆன பெண் சிசு... ஆதரவின்றி கிடந்ததால் அரியலூரில் பரபரப்பு

பிறந்த 3 நாட்களே ஆன பெண் சிசு... ஆதரவின்றி கிடந்ததால் அரியலூரில் பரபரப்பு

பிறந்த 3 நாட்களே ஆன பெண் சிசு... ஆதரவின்றி கிடந்ததால் அரியலூரில் பரபரப்பு
Published on: 

அரியலூரில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு ஆதரவின்றி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தில் இயங்கி வருகிறது குழந்தைகள் காப்பகம். இக்காப்பகத்தின் வெளியே குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வெளியில் வந்து பார்த்தபோது பிறந்து 3 நாட்களே ஆன பெண்சிசு ஆதரவின்றி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் அனாதையாக கிடந்த குழந்தையை மீட்ட குழந்தைகள் காப்பகத்தினர் முதலுதவி சிகிச்சை சிகிச்சை அளித்தனர். அதன்பின் குழந்தைக்கு பாலூட்டப்பட்டது. இதுகுறித்து திருமானூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில், திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் சிசுவை விட்டுச் சென்ற தாயை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com