ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மாணவர் : 5 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு

ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மாணவர் : 5 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு

ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மாணவர் : 5 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
Published on

திருவையாறு அருகே ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மாணவர் 5 நாட்களுக்குப் பின்னர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்த எட்வர்ட்- டேவிட் ஜெயா தம்பதியின் மகன் ரெவின் ஹெஸ்லி. 9ஆம் வகுப்பு படித்து வந்த இவர், நண்பர்களுடன் சேர்ந்து குடமுருட்டி ஆற்றிற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அங்கு ரெவின் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, 5 நாட்களாக தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் வளப்பக்குடி முனியாண்டவர் கோவில் அருகே மாணவர் ரெவினின் உடல் கரை ஒதுங்கியுள்ளதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் மாணவரின் உடலை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com