அடித்து நொறுக்கிய வாகனம்
அடித்து நொறுக்கிய வாகனம்புதியதலைமுறை

பழுது நீக்கியதற்கு 90,000 பில்... ஆத்திரத்தில் வண்டியை நொறுக்கி எடுத்த வாடிக்கையாளர்!

ஓலா நிறுவன ஷோரூம் முன்னால் வைத்து அந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை, வாடிக்கையாளர் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
Published on

ஓலா நிறுவன ஷோரூம் முன்னால் வைத்து அந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை, வாடிக்கையாளர் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

வாடிக்கையாளர்ஒருவர், ஒரு மாதத்திற்கு முன்னதாக வாங்கிய மின்சார வாகனத்தை, பழுது நீக்குவதற்காக ஷோரூமில் விட்டுள்ளார்.

இந்தநிலையில், அந்த நிறுவனம், பழுது நீக்கியதற்காக 90 ஆயிரம் ரூபாய் கட்டணம் விதித்து, பில் வழங்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், ஷோரூமின் முன்னரே வைத்து இருசக்கர வாகனத்தை சுத்தியலால் அடித்து நொறுக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com