மதுரை: முறைகேடாக ரூ. 15.44 லட்சம் மதிப்புள்ள ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை!

மதுரை: முறைகேடாக ரூ. 15.44 லட்சம் மதிப்புள்ள ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை!
மதுரை: முறைகேடாக ரூ. 15.44 லட்சம் மதிப்புள்ள ரயில் பயணச்சீட்டுகள் விற்பனை!

மதுரை கோட்டத்தில் முறைகேடாக ரயில் பயண சீட்டு விற்பனை செய்த 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கடந்த ஆண்டு மதுரை கோட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மதுரை கோட்டத்தில் ரயில் பயண சீட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 15.44 லட்சம் மதிப்புள்ள பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல தடை செய்யப்பட்ட புகையிலையை ரயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 2.56 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல போலி மது பாட்டில்கள் கடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 24,477 மதிப்புள்ள மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. ரயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்திய எட்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 9.79 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ரயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூபாய் 4.82 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.

ரயில்வே சட்ட விதிகளை மீறிய 2,791 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூபாய் 15.94 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை அசுத்தப்படுத்திய 4,684 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூபாய் 9.66 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ரயில்களில் பயணிகள் தவறவிட்ட ரூபாய் 42.45 லட்சம் மதிப்புள்ள உடைமைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ரயில்களில் பயணம் செய்த 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com