“90 சதவீதம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை” - சர்ச்சையில் சிக்கிய திருச்சி ரயில்வே

“90 சதவீதம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை” - சர்ச்சையில் சிக்கிய திருச்சி ரயில்வே

“90 சதவீதம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை” - சர்ச்சையில் சிக்கிய திருச்சி ரயில்வே
Published on

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் 90 சதவீதம் பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. புதிய தலைமுறைக்கு இதற்க‌ன பிரத்யேக ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 ஹெல்பர் உள்ளிட்ட குரூப் டி பணியிடங்களுக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது. இந்தத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இதுவரை 528 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வீடியோவாக புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட 528 பேரில் 475 பேர் வெளிமாநிலத்தவர் என்கிற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பே‌ர் மட்டுமே சேலம் ரயில்வே கோட்டத்தில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதாவது புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் பீகார், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்படும் சூழலில் ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலேயே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள திருச்சி ரயில்வே கோட்ட எம்பிகள் குழுத் தலைவர் திருச்சி சிவா, நியமனம் தொடர்பாக குழுவுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com