உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Published on

உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் தற்போது 10 நீதிபதி பதவியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், 9 பேரை புதிய நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை ஏற்று புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அவர்களது நியமனக் கடிதத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.

அதன்படி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பெலா எம்.திரிவேதி ஆகியோர் பெண்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com