\
கனமழையால் கோவையில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு

கனமழையால் கோவையில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு

கனமழையால் கோவையில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு
Published on: 

மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஓட்டு வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 பெண்கள், சிறுமி என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. வீட்டில் 12 பேர் இருந்த நிலையில், 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 பேரின் நிலைமை இன்னும் தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

தகவலறிந்து சென்ற வட்டாட்சியர், போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com