”அறிவுக்கு பதில் அரிவாளா?” மீண்டும் நெல்லையை உலுக்கிய சம்பவம்; மாணவனை பார்த்து நடுங்கிய ஆசிரியர்கள்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரக்கூடிய பிரபல தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கிடையே சிறு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக மாணவரை வெட்டியுள்ளார். இதனைக் கண்ட வகுப்பு ஆசிரியர் உடனடியாக மாணவரை தடுக்க முயற்சி செய்தபோது, அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து மாணவர், காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து காயமடைந்த ஆசிரியை மற்றும் பள்ளி மாணவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளிக்கே அரிவாளை கொண்டு வந்து சக மாணவரை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனை அரிவாளால் வெட்டியதைத் தொடர்ந்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளயில் இருந்து அழைத்துச் செல்கின்றனர்.
வீட்டிலிருந்து பள்ளிக்கு அரிவாளை கொண்டுவந்து தன் மகனை சக மாணவன் வெட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். எந்த சண்டைக்கும் செல்லாத தன் மகனை ஏன் வெட்டினார்கள் என தெரியவில்லை என சிறுவனின் தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
புத்தகப் பையில் மறைத்து வைத்து அரிவாளை கொண்டுவந்து சக மாணவனை 8ஆம் வகுப்பு மாணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பென்சில் சண்டையால் அரிவாள் வெட்டு நிகழ்ந்துள்ளதாக பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.