தமிழ்நாடு
83 ஆண்டுகளுக்கு பின் அரிய வகை தும்பி கண்டுப்பிடிப்பு
83 ஆண்டுகளுக்கு பின் அரிய வகை தும்பி கண்டுப்பிடிப்பு
83 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் முதன் முறையாக இண்டியன் எமரால்டு வகை தும்பி தேக்கடியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் முதன் முறையாக தேக்கடி புலிகள் காப்பகத்தில் தும்பிகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. 50 குழுக்களாக பிரிக்கப்பட்டு நீரோட்டமுள்ள, உயரமான பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்றது. கணக்கெடுப்பின் முடிவில் தேக்கடி வனத்தில் 77 வகையான தும்பியினங்கள் வாழ்வது தெரிய வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து 83 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக இண்டியன் எமரால்டு வகை தும்பியும் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இண்டியன் எமரால்டு வகை தும்பியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.