கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 82 தமிழக சிறைக் கைதிகள்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 82 தமிழக சிறைக் கைதிகள்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 82 தமிழக சிறைக் கைதிகள்!

தமிழக சிறைக் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 82 கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழக சிறைக் கைதிகளிடையே கொரோனா தொற்று பரவாமல் இருக்க சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள பிரிவைச் சேர்ந்த சிறைக் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோயுடன் உள்ள தடுப்பூசி போடுவதற்கு விருப்பம் தெரிவித்த 13 தண்டனை சிறைக் கைதிகளுக்கு சேலம் மத்திய சிறையில் தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய சிறை, வேலூர், பாளையங்கோட்டை மற்றும் பெண்கள் தனிச்சிறை, வேலூர் ஆகிய சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்த 82 தண்டனை சிறைக் கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

முன்னுரிமை பிரிவைச் சேர்ந்த மற்றும் தடுப்பூசி போடுவதற்கு விருப்பமுள்ள 647 தண்டனை சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்து தரும்படி சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில்குமார் சிங், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், திருத்தப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி, 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் எதுவும் இல்லாத தண்டனை சிறைக் கைதிகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com