\
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 810‌ மெஹாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அத்திப்பட்டு புதுநகரிலுள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தின் இரண்டு நிலைகளில் நாள் தோறும் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மிகை மின் உற்பத்தி காரணமாக முதலாவது நிலையின் மூன்றாவது பிரிவில் 210 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் இரண்டாவது நிலையின் முதலாவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. மின் தேவை குறைவு காரணமாக மொத்தம் 810 மெஹாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com