தொடர் மழை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100 சதவீதம் நிரம்பிய 802 ஏரிகள்

தொடர் மழை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100 சதவீதம் நிரம்பிய 802 ஏரிகள்
தொடர் மழை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100 சதவீதம் நிரம்பிய 802 ஏரிகள்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 802 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன.
நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்திற்கு நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 1,022 ஏரிகள் உள்ளன. இவற்றில் 802 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 172 ஏரிகள் 75 சதவிகிதமும், 48 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 381 ஏரிகள் உள்ளன. இதில் 265 ஏரிகள் 100 சதவிகிதமும், 73 ஏரிகள் 75 சதவிகிதமும், 43 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில், 444 ஏரிகள் 100 சதவிகிதமும், 79 ஏரிகள் 75 சதவிகிதமும், 5 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 93 ஏரிகளில், 74 ஏரிகள் 100 சதவிகிதமும், 19 ஏரிகள் 75 சதவிகிதமும், நிரம்பியுள்ளன. சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 16 ஏரிகளும் 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com