தமிழ்நாடு
தமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது: விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது: விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி.பி.எஸ், சித்த மருத்துவம் ஆகியவற்றை முறையாகப் படிக்காமல் மருத்துவம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாமல், கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.