திருப்பதி அருகே நள்ளிரவில் 80 தமிழர்கள் கைது

திருப்பதி அருகே நள்ளிரவில் 80 தமிழர்கள் கைது

திருப்பதி அருகே நள்ளிரவில் 80 தமிழர்கள் கைது
Published on

தமிழகத்திலிருந்து செம்மரம் வெட்ட வந்ததாக 80-க்கும் அதிகமானோரை ஆந்திர காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். ஆனால், சமையல் வேலைக்கும், கட்ட வேலைக்குமே ஆந்திராவிற்கு சென்றதாக கைதான இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து செம்மரம் வெட்ட ஏராளமானோர் ஒரே லாரியில் புறப்பட்டு வருவதாக ஆந்திர மாநிலம் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனடிப்படையில், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவினர், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீனிவாசபுரம் அடுத்த ஆஞ்சநேயபுரம் சோதனைச்சாவடியில் வனத்துறையினரோடு சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியில் 80-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட வந்தவர்கள் எனக்கூறிய காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.

ஆனால், செம்மரம் வெட்ட வரவில்லை என்றும், சமையல் வேலைக்காக ஆந்திரா வந்ததாகவும் கைதான தமிழக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருப்பதாகவும், முதுகலை பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் கைதான இளைஞர்களில் ஒருசிலர் கூறியுள்ளனர்.

கைதான இளைஞர்களிடம் செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிராணிகளைப் போல மனிதர்களை அழைத்து வந்த லாரி உரிமையாளர் மீதும் மனித உரிமை மீறல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஆந்திர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com