பணி முடித்து வீடு திரும்பிய மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி – 80 சவரன் நகை கொள்ளை

நாகர்கோவிலில் அரசு மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Doctors House
Doctors Housept desk

செய்தியாளர் - நௌஃபால்

---------

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கல்லூரி அருகே உள்ள பிளசன்ட் நகரில் வசித்து வருபவர் கலைகுமார் (52). இவர் நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி புனிதவதியும் மருத்துவராக உள்ளார்.

House
Housept desk

இந்நிலையில், இவர்கள் நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முதல்தள கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த 80 சவரன் நகை மற்றும் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Doctors House
வேலூர்: பேங்க் சென்று திரும்புவோரிடம் நூதன திருட்டு.. தனிப்படை அமைத்து தட்டித்தூக்கிய போலீஸ்!

இதையடுத்து உடனடியாக நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com