சென்னை: 60 வயதைக் கடந்த 80 பேருக்கு கொரோனா

சென்னை: 60 வயதைக் கடந்த 80 பேருக்கு கொரோனா

சென்னை: 60 வயதைக் கடந்த 80 பேருக்கு கொரோனா
Published on

சென்னையில் இன்று மட்டும் 60 வயதைக் கடந்தவர்கள் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

60 - 69 வயதில் 47 பேருக்கும், 70- 79 வயதில் 27 பேருக்கும், 80 வயதைக் கடந்தவர்கள் 6 பேருக்கும் என மொத்தம் 60 வயதை கடந்தவர்கள் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 805 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும்  549 பேர் அடக்கம். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று இதுவரை சென்னையில் 60 வயதைக் கடந்தவர்கள் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com