\
தமிழகத்தில் அரசுப்பணிக்காக காத்திருக்கும் 80 லட்சம் பேர்

தமிழகத்தில் அரசுப்பணிக்காக காத்திருக்கும் 80 லட்சம் பேர்

தமிழகத்தில் அரசுப்பணிக்காக காத்திருக்கும் 80 லட்சம் பேர்
Published on

தமிழகத்தில் அரசுப்பணிக்காக வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு சுமார் 80 லட்சம் பேர் காத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அரசுப்பணிக்காக 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 20,69,337 பேர், வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். 18 வயது முதல் 23 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் 17, 90,845 பேர். 24 வயது முதல் 35 வயது வரையுள்ளவர்களின் எண்ணிக்கை 30,46,619 ஆக உள்ளது. 36 வயது முதல் 56 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்களின் எண்ணிக்கை 11,46,898. அரசுப்பணிக்காக காத்திருப்பவர்களில் 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,730 பேர். ஆக மொத்தம் தமிழகத்தில் 79,78,429 பேர் அரசுப்பணிக்காக வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். இத்தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com