தமிழ்நாடு
டாஸ்மாக்கில் பீர் வாங்கியபோது தகராறு - காவலரை தாக்கிய மர்ம கும்பல்
டாஸ்மாக்கில் பீர் வாங்கியபோது தகராறு - காவலரை தாக்கிய மர்ம கும்பல்
திருவள்ளூரில் டாஸ்மாக்கில் பீர் வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காவலர் மீது எட்டு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.
திருவள்ளூரைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் சென்னை பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் காக்களூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பீர் வாங்கச் சென்றபோது ஒருவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறிது நேரத்தில் அங்குவந்த 8 பேர் கொண்ட கும்பல் காவலர் வேலாயுதம் மீது தாக்குதல் நடத்தி தப்பியோடியது. பின்னர் அவர் அளித்த புகாரின்பேரில் வீடியோ பதிவு அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.