தமிழ்நாடு
சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்டதாக 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்டதாக 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சோழவரம் அருகேயுள்ள மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 8 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங், ரேஸ் உள்ளிட்ட சாகசங்களில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளது குறித்து சோழவரம் காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பைக் ரேஸில் ஈடுபட்ட 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பொதுமக்களை அச்சுறுத்துதல், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.