தமிழ்நாடு
கழிவறைக்கு செல்வதாக குழந்தையை கொடுத்த பெண் - திடீர் தலைமறைவால் சோகம்
கழிவறைக்கு செல்வதாக குழந்தையை கொடுத்த பெண் - திடீர் தலைமறைவால் சோகம்
விழுப்புரத்தில் கழிவறைக்கு செல்வதாகக் கூறி கைக்குழந்தையை விட்டுச்சென்ற பெண் தலைமறைவாகி விட்டார்.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் 8 மாத கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், கழிவறைக்கு சென்று வருவதாகவும் அதுவரை குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். அத்துடன் அங்கிருந்த ஊழியரிடம் குழந்தையை விட்டுச்சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வரவில்லை.
பின்னர் எங்கு தேடியும், அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால், கழிவறை ஊழியர், குழந்தைகள் நல அமைப்பை தொடர்பு கொண்டு குழந்தையை ஒப்படைத்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர். அது அவரது குழந்தை தானா ? அல்லது கடத்தப்பட்ட குழந்தையா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.