\
'8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம்!

'8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம்!

'8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம்!
Published on: 

தமிழகம், புதுச்சேரியில் 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com