“இந்த 8 ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்!” - அமைச்சர் மனோ தங்கராஜ்

முதல் முறையாக 24 மணி நேரமும் செயல்படும் ஆவின் பார்லர்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆவின் வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 8 இடங்களில் 24 மணி நேரம் செயல்படும் ஆவின் பார்லர்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன” என தெரிவித்துள்ளார்.

ஆவின், மனோ தங்கராஜ்
ஆவின், மனோ தங்கராஜ்புதிய தலைமுறை

பெருமழை காரணமாக தேவைக்கேற்ப சில நாட்கள் இந்த பார்லர்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், ஆவின் பால், பால் புவடர் மற்றும் பால் உப பொருட்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, ”அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர்” ஆகிய மையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com