மதுரை மாவட்டத்தில் 79 வயது மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் உள்ளன. அதில் ஒன்றான அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்காக வீரம்மாள் என்ற 79 வயது மூதாட்டி போட்டியிட்டார்.
இந்நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட 7 வேட்பாளர்களை விட 195 வாக்குகள் அதிகம் பெற்று வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார். மிக அதிக வயது கொண்ட மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
இந்த வெற்றியை தங்கள் பகுதி இளைஞர்களுக்கு காணிக்கையாக்குவதாகவும் விவசாயம், தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதே முதல்வேலை எனவும் வீரம்மாள் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 2 முறை தோல்வியை சந்தித்த வீரம்மாள் 3 வது முறையாக தற்போது வெற்றி பெற்றுள்ளார்.