\
தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 13,000-ஐ தாண்டியது ஒருநாள் கோரோனா பாதிப்பு - 78 பேர் உயிரிழப்பு
Published on: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000 த்தை தாண்டியது.

தமிழகத்தில் ஒரே நாளில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் 13,732 நபர்களும், வெளிமாநிலங்களில் வந்த 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 12 வயதுக்குட்பட்ட 514 சிறார்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

நேற்று கொரோனா தொற்றுக்கு 59 பேர் உயிரிழந்த நிலையில் இன்று சிகிச்சைப் பெற்று வந்த 78 நபர்கள் உயிரிழந்தனர். இதில் சென்னையில் அதிகபட்சமாக 37 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 95,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டில் 985 பேருக்கும் கோவையில் 889 பேருக்கும் திருவள்ளூரில் 807 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com